100-வது போட்டி: சூர்யகுமார் யாதவுக்கு சிறப்பு ஜெர்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவுக்கு 100-வது போட்டியாக அமைந்தது. இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவருக்கு அணி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஜெர்சி வழங்கப்பட்டது.

34 வயதான சூர்யகுமார் யாதவ், இதுவரை மொத்தம் 154 ஐபிஎல் போட்டிகளால் விளையாடி உள்ளார். 139 இன்னிங்ஸில் 3765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி உள்ளார். 98 இன்னிங்ஸில் 3157 ரன்கள் எடுத்துள்ளார். அதற்கு முன்னதாக கொல்கத்தா அணியில் அவர் விளையாடி இருந்தார்.

Read Entire Article