14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

3 months ago 5
ARTICLE AD BOX

திருப்பூர்: ​காப்​பகத்​தில் தங்​கிப் படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கைதான பாதிரி​யாருக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திருப்​பூர் மாவட்​டம் ஊத்​துக்​குளி பல்​ல​க​வுண்​டம்​பாளை​யம் கூனம்​பட்​டியை சேர்ந்​தவர் ஆண்ட்​ரூஸ் (50). பாதிரி​யரான இவர், அப்​பகு​தி​யில் ஆதர​வற்ற பள்ளி மாணவர்​களுக்​கான காப்​பகம் நடத்தி வந்​தார். இதில் 20 குழந்​தைகள் தங்​கிப் படித்துவந்​தனர்.

கடந்த 2022 டிசம்​பர் மாதம் காப்​பகத்​தில் தங்கி படித்த 14 வயது சிறுமிக்​கு, பாதிரி​யார் ஆண்ட்​ரூஸ் பாலியல் தொந்​தரவு கொடுத்​துள்​ளார். உடல் நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால் அந்த சிறுமி வீட்​டுக்​குச் சென்​று, தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரி​வித்​தார். இதில் அதிர்ச்சி அடைந்த தாயார் ஊத்​துக்​குளி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

Read Entire Article