"15 வருஷத்துக்கு முன்னாடி' வெண்ணிலா கபடி குழு' பட விழாவுல..." - விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா

6 months ago 7
ARTICLE AD BOX

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றி மாறன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

Oho Enthan Baby MovieOho Enthan Baby Movie

அறிமுக நடிகர் ருத்ரா பேசுகையில், "எனக்கு இப்படியான தருணம் ரொம்பவே முக்கியம். இதற்காக நான் பல வருடங்கள் காத்திருந்தேன்.

15 வருஷத்துக்கு முன்பு இதே இடத்தில் வெண்ணில கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமர்ந்திருந்தேன்.

இப்போது 15 வருஷம் கழித்து, அண்ணன் தயாரிப்பாளராக உட்கார்ந்திருக்கிறார். நான் நடிகராக மேடையில் நிற்கிறேன். எனக்கு சினிமாதான் முதல் நண்பன். ஆசையோடு பயணத்தைத் தொடங்கும்போது, எனக்கு முருகதாஸ் சாரிடம் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அவரிடம் 1.5 வருடங்கள் வேலை பார்த்தேன். பிறகு, டைரக்ஷனில் பல விஷயங்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டு, இன்னும் கற்க விரும்பினேன். அப்படியான நேரத்தில், அண்ணன் அவருடைய அனுபவத்தில் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

Actor Rudra - Oho Enthan BabyActor Rudra - Oho Enthan Baby

அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் கொஞ்ச நாள் வேலை பார்த்து, தயாரிப்புத் தரப்பு வேலைகளைக் கற்கச் சொன்னார். அங்கு இருந்த சமயத்தில், இந்தப் படத்தின் கதை வந்தது.

இந்தப் படம் பண்ணிய 2 வருடங்களில் பல கடினங்களையும் சந்தித்தேன். அப்பாவும் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார். அண்ணனும் கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணாதான். அவ்வளவு பொறுமையான மனிதர். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வார்," எனப் பேசினார்.

Read Entire Article