ARTICLE AD BOX
Actor Shri: கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தை புரட்டிப் போட்டிருந்தார் நடிகர் ஸ்ரீ. மாநகரம், வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகராக இருந்தவர் ஸ்ரீ. இறுகப்பற்று திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார்.
திடீரென அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் பெரிய அளவில் வைரல் ஆனது. இதற்கு காரணம் அவருடைய உடல் தோற்றமும், அவர் போட்ட போஸ்ட்களும் தான். ஒரு கட்டத்தில் எல்லாமே எல்லை மீற அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தார்கள்.
இது குறித்து லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஸ்ரீ-யின் முதல் போஸ்ட்
இந்த நிலையில் ஸ்ரீ தன்னுடைய முதல் நாவலை இன்று வெளியிடுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Actor Shriமே ஐ கம் இன் என்ற ஆங்கில நாவலை தான் எழுதி முடித்து வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீ. அவருடைய நிலை குறித்து இவ்வளவு நாள் வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அந்த போஸ்ட் கொடுத்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்து மழையை தெரிவித்து வருகிறார்கள்.

6 months ago
7





English (US) ·