ARTICLE AD BOX

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 13, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

1 month ago
2







English (US) ·