ARTICLE AD BOX

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபிக்கான தொடரில் ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 371 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்திருந்தது.

5 months ago
7







English (US) ·