2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

8 months ago 8
ARTICLE AD BOX

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 128 வருடங்​களுக்​குப் பிறகு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒலிம்​பிக்குக்கு திரும்பி உள்​ளது. இந்​நிலையில், போட்டி அமைப்​பாளர்​கள் லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் கிரிக்​கெட்​டில் 6 அணி​கள் மட்​டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்​துள்​ளனர்.

ஆடவர் பிரி​வில் 6 அணி​களும், மகளிர் பிரி​வில் 6 அணி​களும் கிரிக்​கெட் விளை​யாட்​டில் கலந்து கொள்​ளும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடைசி​யாக 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் இடம் பெற்​றிருந்​தது. இதில் கிரேட் பிரிட்​டன், பிரான்ஸ் அணி​கள் விளை​யாடி இருந்​தன. இந்த இரு அணி​கள் இரு நாட்​கள் கொண்ட ஆட்​டத்​தில் மோதி​யிருந்​தன.

Read Entire Article