29 : " 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!"- ஷான் ரோல்டன்

2 weeks ago 2
ARTICLE AD BOX

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார்.

விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

'29' '29'

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஷான் ரோல்டன், " என்னுடைய 29 வயதில் நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.

அந்த சமயத்தில் நான் மியூசிக்கை கொஞ்சநாள் விட்டுவிட்டேன். அந்த வருடத்தில் நான் இசையமைக்கவே இல்லை.

யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்.

நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது.

வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன்.

ஷான் ரோல்டன் ஷான் ரோல்டன்

நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான்.

அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன்.

எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article