"29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..!" - கார்த்திக் சுப்புராஜ்

2 weeks ago 2
ARTICLE AD BOX

'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be

இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் "ரத்னகுமார் இயக்கிய 'மேயாத மான்' திரைப்படம் எங்களுடைய 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது.

அதுக்கு அப்புறம் இப்போ ரத்னகுமாரோட '29' படத்தை லோகாஷ் கனகராஜோட இணைந்து தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம்.

இந்தப் படத்த தனுஷ் சார் கிட்ட சொன்னோம். அவர் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அது நடக்கல. தனுஷ் பண்ன வேண்டிய படத்த வேற யார வச்சு எடுக்குறதுனு யோசிச்சு இந்தப் படம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு.

'ஜிகர்தண்டா 2' படத்துல விது செட்டானியாக பிரமாதமாக நடிச்சிருப்பார். அதபார்த்து விது மேல ஒரு நம்பிக்கை வந்துச்சு. அதனால இந்தப் படத்துல அவரையே நடிக்க வச்சோம். ரொம்ப நல்ல நடிச்சிருக்கார் படமும் ரொம்ப நல்ல வந்திருக்கு.

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் முதல் ஆக்‌ஷன் சீரிஸ் – தயாரித்து நடிக்கும் விஜய் சேதுபதி!

இந்தப் படத்துல 29 வயசுல ஒருவர் படுகிற கஷ்டத்த, நடந்த நல்ல விஷயத்தப் பத்தி சொல்லுவாங்க. எனக்கு 29வது வயசு ரொம்ப ஸ்பெஷலானது. அப்போதான் 'பீட்சா' எடுத்தேன். முதல் படமே நல்ல வெற்றி. அதை என்னைக்கும் மறக்க முடியாது" என்று பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

Read Entire Article