3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன்

7 months ago 8
ARTICLE AD BOX

கொழும்பு: மூன்று நாடு​களுக்கு இடையி​லான கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின. கொழும்​பிலுள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் குவித்​தது.

Read Entire Article