ARTICLE AD BOX
'எட்டுத் தோட்டாக்கள்' ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'.
இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவி மோகன், 'டூரிஸ்ட் ஃபேமிலி' அபிஷன் ஜீவிந்த், 'கொட்டுக்காளி' வினோத்ராஜ், 'அயலான்' ரவிக்குமார், 'அயலி' முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் பேசியிருக்கும் நடிகர் சித்தார்த், "இப்படியொரு நல்ல படம் எனக்கு 40வது படமாக அமைஞ்சிருக்கு. முதல் படத்தில் என்னோட வெற்றிக்காக என்னோட அம்மா அப்பா எனக்காக நிறைய பண்ணாங்க. இப்போ என்னோட 40வது படம் நல்லா இருக்கனும்னு தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் ஶ்ரீ கணேஷ் நிறைய பண்ணாங்க. என்னைப் பற்றி, எனக்காக இங்க நிறையபேர் பேசியிருக்கீங்க" என்று கண்ணீருடன் பேசினார்.
நடிகர் சித்தார்த்மேலும், "இப்படத்தைப் பார்த்துட்டு யார் என்ன சொல்றாங்க, படம் ஓடுதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, படத்தைப் பார்த்துட்டு 'என்ன நடந்தாலும் கவலையில்லை. நல்ல படம் பண்ணிட்டோம்' என்றார். நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம். நல்ல படம் பண்ண மனநிறைவு இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கும் அந்த மனநிறைவு கிடைக்கும்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·