'96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா? - வெளியானத் தகவல் குறித்து இயக்கநர் விளக்கம்!

7 months ago 8
ARTICLE AD BOX

‘96’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் அப்படத்திற்கு பிறகு கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் 'மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி முடித்து இருப்பதாக பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.

 '96' படம் '96' படம்

இதனிடையே, " '96' இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை. இதனால்  பிரதீப் ரங்கநாதனை இயக்குநர் பிரேம்குமார் அணுகினார். தனது இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்தார். இரு நடிகர்களும் மறுத்துவிட்டதால் தற்போது புதிய நடிகரை இயக்குநர் தேடி வருகிறார்" என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தகவல் பொய்யானது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96' படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2 'எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு.

அதற்கும் '96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article