Abhimanyu Easwaran: மறுக்கப்படும் வாய்ப்பு; வாக்குறுதி கொடுத்த கம்பீர்; அபிமன்யு தந்தை சொல்வது என்ன?

4 months ago 6
ARTICLE AD BOX

இங்கிலாந்து  நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

காயங்கள் மற்றும் வீரர்களின் தேர்வு மாற்றங்களால் கடைசி டெஸ்டிலாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்காதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அபிமன்யு ஈஸ்வரன் அபிமன்யு ஈஸ்வரன்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்திருக்கும் அபிமன்யுவிற்கு இந்திய அணியில் விளையாடுவது நீண்ட கால கனவாகவே இருக்கிறது.

உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி நீண்ட காலமாகத் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஒரு சிறந்த வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக, ஊடகவியலாளர் விக்கி லல்வானியின் யூட்யூப் சானலுக்குப் பேட்டியளித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன், "இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் அபிமன்யு மிகவும் வருத்தமடைந்தார்.

'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று என்னிடம் போனில் வருத்தப்பட்டார். கம்பீர் என் மகனிடம், 'நீ சரியான பாதையில்தான் பயணிக்கிறாய்.

கம்பீர்கம்பீர்

உனக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதுவும் நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு அவரை புறக்கணிக்கப் போவதில்லை.

அவர் உழைப்பிற்கான பலன் நிச்சயம் அவருக்குக் கிடைக்கும்' எனக் கம்பீர் உறுதி அளித்தார்” என அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article