Abhishek Sharma: `கடந்த 4 நாள்களாக கடும் காய்ச்சல், ஆனாலும்..!' - அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி!

8 months ago 8
ARTICLE AD BOX

'சன்ரைசர்ஸ் வெற்றி!'

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. 246 ரன்களை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அதிரடியாக சேஸ் செய்து முடித்திருக்கிறது. அந்த அணியின் சார்பில் ஓப்பனர் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்களை எடுத்திருந்தார்.

அபிஷேக் சர்மாஅபிஷேக் சர்மா

ஐ.பி.எல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதுதான். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு யுவராஜ் சிங்குக்கும் சூர்யகுமார் யாதவ்வுக்கும் நன்றி கூறி நெகிழ்ந்தார்.

Abhishek Sharma: ``என் கரியர் முழுக்க செய்ததை 2 மணிநேரத்தில் செய்துவிட்டார்" - அபிஷேக் குறித்து குக்

'அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி!'

அபிஷேக் சர்மா பேசுகையில், 'கடந்த 5 போட்டிகளில் 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்தேன். அப்படியொரு நிலையிலிருந்து மீண்டு வருவது எந்த வீரருக்குமே சுலபமாக இருக்காது. என்னுடைய அணிக்கும் கேப்டனுக்கும்தான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

Abhishek SharmaAbhishek Sharma

எதையும் போட்டு குழப்பிக் கொள்ளும் வகையில் இல்லாமல், ரொம்பவே எளிமையான விஷயங்களைத்தான் பேட்டர்களிடம் அணியின் சார்பில் பகிர்ந்துகொண்டனர். இன்னிங்ஸூக்கு முன்பாக டிராவிஸ் ஹெட்டிடமும் நிறைய பேசினோம். சேஸிங்குக்கு இறங்கும்போது டார்கெட்டை பற்றி எதுவும் பேசவில்லை. எங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடவே நினைத்தோம்.

என்னுடைய பெற்றோர் இங்கே வந்திருக்கின்றனர். நான் மட்டுமில்லை ஒட்டுமொத்த அணியுமே என்னுடைய பெற்றோருக்காக ஆவலாக காத்திருந்தனர். எங்கள் அணிக்கு அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நாங்கள் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்தோம். அந்த தோல்வியிலிருந்து அணியை மீட்க வேண்டும் என நினைத்தேன்.

போட்டிக்கு முன்பாகத்தான் அந்தத் துண்டுச் சீட்டை எழுதினேன். தினசரி காலையில் எழுந்தவுடன் எதையாவது எழுதுவேன். இன்றைக்கு நான் எதை செய்தாலும் அது ஆரஞ்சு ஆர்மிக்காகதான் என தோன்றியது. அதனால்தான் அப்படி எழுதினேன்.

Abhishek SharmaAbhishek Sharma
Abhishek Sharma : 'சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!' - என்ன சொல்ல வருகிறார்?

இந்த நேரத்தில் யுவராஜ் சிங்குக்கும் சூர்யகுமார் யாதவ்க்கும் நன்றி கூற விரும்புகிறேன். கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் உடல் நிலை சரியில்லாமல் ரொம்பவே அவதிப்பட்டேன். ஆனால், யுவராஜ் சிங், சூர்யகுமார் போன்றோர் எனக்கு கிடைக்கப்பெற்றதில் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார்கள். என்னால் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆட முடியுமென அவர்கள் நம்பினார்கள்.' என்றார்.

யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவுக்கு நிறைய பயிற்சிகளை அளித்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article