Actor Rajesh: 'அவருடைய மகனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம், அதற்குள்...'- பார்த்திபன் வருத்தம்

7 months ago 8
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராஜேஷின் உடலிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பார்த்திபன், “ அதிர்ச்சியான இந்த திடீர் மரணத்தை என்னால் நம்பவே முடியவில்லை.

நடிகர் ராஜேஷ்நடிகர் ராஜேஷ்

உலகத்தில் இறப்பு என்பது சகஜமான விஷயம். ஆனால் ராஜேஷைப் பொறுத்தவரை அஸ்ட்ராலஜியில் இருந்து ஆரோக்கியம் வரை எல்லாவற்றையும் முன்கூட்டித்  தெரிந்து வைத்திருப்பார்.

சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் இருவரும் சந்தித்தோம். 99 வயது வரை நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறேன். அதை நீங்கள் ஃபாலோ செய்தால் நீங்கள் நிச்சயம் 100-வது வயதைக் கொண்டாடலாம் என்று சொன்னார். எனக்கு பாடம் நடத்தினார்.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அவருடைய நண்பர்களுக்கு ஆரோக்கியமாக எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

நண்ணீர் என்று சொல்லக்கூடிய ஒரு நீரைத்தான் பருகுவார். உப்பில் இருந்து சர்க்கரை வரை அவர் எல்லாவற்றையும் சரியாகத்தான் பயன்படுத்துவார்.  சினிமாவைப் பற்றி பேசுவதை விட ஆரோக்கியத்தைப் பற்றித்தான் அதிகம் பேசுவோம்.

பார்த்திபன்பார்த்திபன்

அவருடைய மறைவை சகித்துக்கொள்ள முடியவில்லை. திரைக்கதை நன்றாக எழுதுவார். நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கலாம் என்று சொன்னதற்கு கமலை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை என்று சொன்னார்.

அவருடைய மகனுக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.     

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article