ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார்.
நடிகர் ராஜேஷ்சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ராஜேஷின் மறைவிற்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.#ActorRajesh
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

7 months ago
8





English (US) ·