ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களும் செய்து குணச்சித்திர நடிகராக தன்னை பதிவு செய்துக் கொண்ட நடிகர் ராஜேஷ் காலமானார்.
150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த இவர் தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் திரைப்படங்கள், சீரயல்களில் நடித்திருக்கிறார். 1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
Actor Rajeshஇதை தாண்டி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களும் செய்து குணச்சித்திர நடிகராக தன்னை பதிவு செய்துக் கொண்டார்.
ஜோதிடத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல ஜோதிடர்களையும் சமீப நாட்களில் ஒரு யூட்யூப் சேனலுக்காக நேர்காணல் செய்து வந்தார். 1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் ராஜேஷ். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
Thug Life: `` `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" - மணிரத்னம் ஓப்பன் டாக்
Actor Rajeshஇன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 76. அவரின் உடல் அவருடைய ராமப்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

7 months ago
8





English (US) ·