Actor Rajesh: "தமிழ்த் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய கலைஞர்!" - டி. ராஜேந்தர் இரங்கல்

7 months ago 8
ARTICLE AD BOX

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த இவர், தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் திரைப்படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Actor RajeshActor Rajesh

அவருடைய உடல் ராமாபுரத்திலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், டி. ராஜேந்தரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ராஜேஷ் குறித்து அவர், "தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் நடிப்பாற்றல் கொண்டவர். பேச்சாற்றல் மிக்கவர். தனித்தன்மை பெற்றவர்.

தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர்.

T. RajendarT. Rajendar

அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," எனக் கூறியிருக்கிறார்.

Read Entire Article