Actor Sri: ``என்னுடைய முதல் நாவல் MAY EYE COME IN?" - நடிகர் ஶ்ரீ சொன்ன அப்டேட்

6 months ago 8
ARTICLE AD BOX

சின்னத் திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ எனும் ஶ்ரீராம் நடராஜன். `வழக்கு எண் 18/9', `மாநகரம்', `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', `வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான நடிகராக உருவாகிவந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான `இறுகப்பற்று' படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீ, இரண்டு நாவல்கள் எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகர் ஶ்ரீ நடித்த திரைப்படத்துக்கு அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற பேச்சு எழுந்தது.

இதற்கிடையில்தான் சமீபத்தில் நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் முடியின் நிறத்தை மாற்றி, உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்த நிலையில், நடிகர் ஶ்ரீ `MAY EYE COME IN?' என்ற நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``18 ஜூன் 2025, புதன்கிழமை. எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN?"-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. "AMAZON.IN"-ல் உங்கள் கிண்டில் பிரதிகளை இப்போதே பெறுங்கள்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Actor Sri: ''ஶ்ரீயை தொடர்புகொள்ள நீண்ட நாட்களாக முயற்சிக்கிறோம்'' - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு
Read Entire Article