Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகிழ்ந்த ராகுல் தேவ்

7 months ago 8
ARTICLE AD BOX

அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

அஜித்தின் ‘வேதாளம்’, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ராகுல் தேவ் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய அவர், " ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் அஜித் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ராகுல் தேவ்ராகுல் தேவ்

அவர் அற்புதமான மனிதர்களில் ஒருவர். எல்லோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடிய நபர்.

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது படத்தின் க்ளைமாக்ஸ் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 வரை காட்சிகளைப் படமாக்கினோம்.

தினமும் இரவு முழுவதும் பணிபுரிந்தப் பிறகு, அவர் உப்புமா, இட்லி சமைத்துக் கொடுத்தார்.

எனக்கு மட்டுமல்ல, 70, 80 பேர் அடங்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சமைத்துக் கொடுத்தார்.

சமைப்பது என்றால் வெறும் மேற்பார்வை அல்ல, அவரே முன்னின்று அனைத்தையும் செய்வார்.

அஜித்அஜித்

வெங்காயம் வெட்டுவது முதல் அனைத்தையும் அவரே செய்வார். நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, தனது வீட்டிலிருந்து என்ன கொண்டு வரட்டும் என்று கேட்டார்.

எதுவானாலும் சரிதான் என்று சொன்னேன். மறுநாள் காலை உணவை எடுத்துவந்துக் கொடுத்தார். அவர் அதீத விருந்தோம்பல் பண்பு கொண்டவர்” என்று ராகுல் தேவ் நெகிழ்ச்சியாக அஜித் குமார் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். 

Ajith: ``பொருளாதார காரணத்தால் என்னுடைய ரேஸிங் ஆசைக்கு என் பெற்றோர்கள்..'' - பகிர்கிறார் அஜித்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article