ARTICLE AD BOX
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை வைத்து எடுத்த 'Good Bad ugly' அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பல கெட்டப்களில் அஜித்தை வைத்து விதவிதமாக மாஸான அறிமுகங்கள் கொடுத்துது வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன்.
Good Bad Ugly - GBU Mamey Songஇதுகுறித்துப் பேசியிருக்கும் ஆதிக், "அஜித்சார் கூட இன்னொரு படம் பண்றேன். அது குட் பேட் அக்லி மாதிரி கேங்ஸ்டர் படமா இருக்காது. வேறு கதைக்களமாகத்தான் இருக்கும். சீக்கிரம் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வரும்.
இந்த ஆண்டு பல பெரிய படங்கள் ஹிட் ஆயிருக்கு, அந்த வரிசைல 'குட் பேட் அக்லி'யும் இருந்தா சந்தோஷம்தான். அதைத் தவிர்த்த நல்ல கண்டண்ட் இருக்க படங்களுக்கு வரவேற்பு கிடைக்குறதும் சந்தோஷமா இருக்கு" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
7





English (US) ·