ARTICLE AD BOX
நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தார்.
தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதாவது, "நீங்கள் கார் ரேஸைப் பிரபலப்படுத்துங்கள். என்னைப் பிரபலப்படுத்த வேண்டாம்.
இந்திய கார் ரேஸ் வீரர்களுக்கு நீங்கள் (தனது ரசிகர்கள்) ஆதரவளிக்க வேண்டும்.
இங்கு கார் ரேஸில் ஈடுபடும் இந்திய வீரர்களைப் பிரபலப்படுத்துங்கள்.
Ajith Kumar இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் அவர்களின் கடின உழைப்பு பலருக்கும் தெரிவதில்லை.
நிச்சயமாக இந்திய வீரர்கள் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன் ஆவார்கள்.
கார் ரேஸ் என்பது வெறும் வேடிக்கையான போட்டி இல்லை" என்று கூறியிருக்கிறார்.
Ajith Kumar: ``பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி'' - நடிகர் அஜித் குமார் அறிக்கைசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·