ARTICLE AD BOX
பாஞ்சாலங்குரிச்சி', நேசம்', `உல்லாசம்' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மகேஷ்வரி. இவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் சகோதரியின் மகள்.
சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான சிறப்பு நேர்காணலில் நடிகை மகேஷ்வரி பங்கேற்றிருந்தார்.
Actress Maheshwariஜெகபாதி பாபுவுடனான நேர்காணலில் திரைத்துறையினர் பலரும் பர்சனல், கரியர் எனப் பலரும் அறிந்திடாத பல தகவல்களை அவர்கள் பகிர்ந்துக் கொள்வார்கள்.
அப்படி இந்த நேர்காணலில் நடிகர் அஜித் பற்றி பேசியிருக்கிறார் நடிகை மகேஷ்வரி.
நடிகர் மீது க்ரஷ் வந்திருக்கிறதா என ஜெகபதி பாபு கேள்வி எழுப்ப, அதற்கு பதில்தந்த மகேஷ்வரி, நடிகர் அஜித் மீதுதான் முன்பு க்ரஷ் இருந்தது.
க்ரஷ் என்பதை தாண்டி மனிதராக அவர் மீது ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம்.
படப்பிடிப்பும் தள்ளிப் போனதால் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். கடைசி நாள் படப்பிடிப்பில் மீண்டும் இவரைப் பார்க்க முடியாதென சோகமாக அமர்ந்திருந்தேன்.
Actress Maheshwariஅப்போது அவர் என்னிடம் மஹி, `நீ என்னுடைய இளைய சகோதரியைப் போல இருக்கிறாய். உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேள்' எனக் கூறினார்.
(ஜாலியாக) அந்த வார்த்தைகள் என்னை மனமுடையச் செய்தது. தொடங்குவதற்கு முன்பே அது முடிந்துவிட்டது." எனப் பகிர்ந்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·