Ajith: "இது என் நேரம், நான் பின்வாங்க மாட்டேன்... ஏன் என்னால் முடியாது?" - அஜித் ஓப்பன் டாக்

6 months ago 7
ARTICLE AD BOX

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் அஜித் நடித்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படமும், ஏப்ரல் மாதத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியானது.

அஜித்அஜித்

இப்போது தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரேஸிங் களத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியதும், கார் ரேஸ் தொடர்பாக சில ஊடகங்களுக்கு அஜித் பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில், 'ஆட்டோகார் இந்தியா' என்ற ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில், அஜித் தனது பயணம் மற்றும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவர், "மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து நான் என்னை மதிப்பிடமாட்டேன். நான் என் விதிமுறைகளில் வெற்றியாளனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய சினிமா கரியரின் தொடக்க நாட்களில், நான் தமிழ் உச்சரிப்பிற்காக விமர்சனங்களை சந்தித்திருக்கிறேன்.

நான் என் பலவீனத்தைப் புறக்கணிக்காமல், அதைச் சரி செய்ய கடினமாக உழைத்தேன். இப்போது, அதன் பலன்கள் தெரிகிறது.

அஜித்அஜித்

திரைப்படங்களைப் போலவே, ரேஸில் காயங்கள் ஒரு பகுதியாகும். ஆனால், நான் கவனத்துடன் செயல்படக்கூடியவன். இது என் நேரம். நான் பின்வாங்க மாட்டேன். நான் உடல்நிலை அனுமதிக்கும் வரை கார் ரேஸில் தொடர விரும்புகிறேன்.

கடவுளின் அருளால், என் உடல்நிலை நன்றாக உள்ளது. என் குழுவும் குடும்பமும் எனக்கு ஆதரவாக உள்ளனர். 60 வயதுக்கு மேல் கூட பந்தயத்தில் ஈடுபடும் பந்தய வீரர்களைப் பார்த்திருக்கிறேன்.

அப்படி ஏன் என்னால் முடியாது? கார் ரேஸ் எனக்கு வெறும் பொழுதுபோக்கு அல்ல. நான் அதை ஆழமாக நேசிக்கிறேன். என் குழுவை எட்ட முடியாத உயரங்களுக்கு எடுத்துச் செல்வதே என் இலக்கு" எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article