Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

1 month ago 2
ARTICLE AD BOX

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித்.

அஜித் குமார்அஜித் குமார்

அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது.

தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது.

இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன்.

இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

Read Entire Article