ARTICLE AD BOX
இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியை வென்றதன்மூலம் முதல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளனர்.
50 வயதாகும் முஜும்தார் மும்பையில் பிறந்த கிரிக்கெட்டர். உள்நாட்டு போட்டிகளில் பெயர்பெற்ற இவர், துரதிர்ஷ்டவசமாக நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை ஒருமுறைகூட பெறவில்லை. இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, இவரின் கனவும் கூட!
கடந்த அக்டோபர் 2023ம் ஆண்டு பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்றார். தனது நிதானமான குணத்தால் அணியை நிலைப்படுத்தினார். கேப்டன் ஹர்மன்பிரீத் உடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.
அவரது ஏற்றத்திலும் இறக்கத்திலும் அணியை ஒருமைப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிறது போட்டியில், ஜெமிமா ரோட்ரிகஸை 3வது இடத்துக்கு எடுத்துவந்தது, காயமடைந்த பிரத்திகாவுக்கு பதில், சஃபாலி வெர்மாவை அணிக்குள் எடுத்துவந்தது என முக்கிய முடிவுகளை மேற்கொண்டார்.
Team IndiaAmol Muzumdar பேசியது என்ன?
வெற்றியைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்த அணியை நினைத்து அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான சாதனை. இந்த வெற்றிக்காக இந்த வீராங்கனைகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி.
இடையில் எங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களை தோல்விகளாக பார்க்கவில்லை. ஏனெனில் அந்த போட்டிகளில் கூட நாங்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தோம். அதனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு மகுடம்.
ஷெஃபாலியின் செயல்பாட்டை ஒரே வார்த்தையில் மேஜிக்கல் எனக் கூறுவேன். அரையிறுதியில்தான் அணிக்குள் வந்தார். ரன்கள் அடித்து விக்கெட்டும் எடுத்து கொடுத்தார், அசத்திவிட்டார். கடந்த சில காலமாக வீராங்கனைகளின் பிட்னஸிலும் பீல்டிங் திறனிலுமே அதிக கவனம் செலுத்தினோம். அது இன்று பலன் கொடுத்திருக்கிறது" எனப் பேசினார்.

1 month ago
3







English (US) ·