Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று மாலை சென்னையில்!

6 months ago 7
ARTICLE AD BOX

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

விஜய் சேதுபதி, சாய் பல்லவி, கார்த்தி, ஜமா..! - ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள்!
Ananda Vikatan Cinema Awards 2024Ananda Vikatan Cinema Awards 2024

சமீபத்தில் இந்தாண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். மொத்தமாக 35 பிரிவுகளுக்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்படும்.

எஸ்.எஸ். வாசன் விருது - எஸ்.பி. முத்துராமன்,

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி,

சிறந்த நடிகை - சாய் பல்லவி,

சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ்,

சிறந்த திரைப்படம் - கொட்டுக்காளி,

சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி,

சிறந்த வெப் சீரிஸ் - தலைமைச் செயலகம்,

சிறந்த பொழுதுபோக்கு நடிகர் - கார்த்தி,

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ்,

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ஷான் ரோல்டன்,

சிறந்த திரைக்கதை - நித்திலன் சாமிநாதன் (மகாராஜா),

சிறந்த வசனம் - விடுதலை 2,

சிறந்த கதை - நந்தன்,

சிறந்த ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்,

சிறந்த படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்,

சிறந்த சண்டைப் பயிற்சி - அமரன்

சிறந்த நடன இயக்கம் - சாண்டி,

சிறந்த கலை இயக்கம் - ஜாக்கி,

சிறந்த அறிமுக நடிகர் - பாரி இளவழகன்,

சிறந்த அறிமுக நடிகை - கெளரி ப்ரியா,

சிறந்த குணச்சித்திர நடிகர் - கருணாஸ்,

சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்வாஸ்விகா,

சிறந்த நகைச்சுவை நடிகர் - பால சரவணன்,

சிறந்த வில்லன் நடிகர் - சேத்தன்,

சிறந்த வில்லன் நடிகை - சிம்ரன்,

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல்,

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - அரண்மனை 4,

சிறந்த படக்குழு - ஜமா,

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசரண்,

சிறந்த பின்னணி பாடகி - சிந்தூரி விஷால்,

சிறந்த பாடலாசிரியர் - மோகன் ராஜன்

Ananda Vikatan Cinema Awards 2024Ananda Vikatan Cinema Awards 2024

சிறந்த ஆடை வடிவமைப்பு - கேப்டன் மில்லர்,

சிறந்த ஒப்பனை - தங்கலான்,

சிறந்த அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ் - அயலான் போன்ற பல பிரிவுகளில் பலர் விருது பெறவிருக்கிறார்கள்.

இந்த விருதைப் பெறுவதற்கும், விருதை வழங்குவதற்கும் திரைத்துறையினர் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த விழாவில் தொடர்பான அனைத்து அப்டேட்களையும், திரைப்பிரபலங்கள் பேசும் விஷயங்கள் அனைத்தையும் நேரலையாகத் தெரிந்துகொள்ள, இன்று மாலை 4 மணி முதல் விகடன் இணையதளத்தோடு இணைந்திருங்கள்.

விஜய் சேதுபதி, சாய் பல்லவி, கார்த்தி, ஜமா..! - ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article