Andre Russell: "வேறு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது" - IPL-ல் இருந்து ஓய்வு

3 weeks ago 2
ARTICLE AD BOX

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல்.

2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து 12 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ம் ஆண்டுக்கான சீசனில் ரசலை ஏலத்திற்காக வெளியிட்டது கேகேஆர் அணி நிர்வாகம். இதனால் அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் பயிற்சியாளராக கேகேஆரில் தொடர்வதாக தனது புதிய பயணம் குறித்தும் பேசியுள்ளார்.

Knights Army, presenting your pic.twitter.com/sOLEnEMCva

— KolkataKnightRiders (@KKRiders) November 30, 2025

ரசல் பேசியது என்ன?

மேலும் ரசல் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மற்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடப்போவதாகவும் பேசியுள்ளார். ஓய்வு முடிவு பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் இந்த முடிவை எடுத்தபோது, ​​இந்த நேரத்தில் இதுதான் சிறந்த முடிவு என்று உணர்ந்தேன்" எனக் கூறிய அவர்,

"நான் மங்கிப் போக விரும்பவில்லை, ஒரு லெகசியை விட்டுச் செல்ல விரும்புகிறேன். ரசிகர்கள் 'ஏன்? உங்களிடம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. நீங்கள் இன்னும் சிறிது காலம் ஆடலாம்' என்று கேட்கும்போது ஓய்வு பெறுவது நல்லது, அதற்கு பதிலாக 'ஆம், நீங்கள் அதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்' என்று அவர்கள் சொல்லும் வரை விளையாட வேண்டியதில்லை." எனப் பேசியுள்ளார்.

கேகேஆரில் சிக்ஸர்கள் அடித்து போட்டிகளையும் மேன் ஆஃப் தி மேட்ச்களையும் வென்ற தருணங்களை நினைவு கூர்ந்தவர் மற்ற ஜெர்சிகளில் தன்னை பார்ப்பது விசித்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"நீங்கள் சமூக ஊடகங்களைப் பார்க்கும்போது, ​​(மற்ற அணிகளின்) வெவ்வேறு ஜெர்சிகளில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் தொடர்ந்து பார்க்கிறீர்கள். ஊதா மற்றும் தங்க நிறத்தைத் தவிர வேறு எந்த நிறத்திலும் என்னைப் பார்ப்பது எனக்கு விசித்திரமாக இருந்தது, அந்த எண்ணங்கள் என் தலையில் ஓடிக்கொண்டே இருந்தன, சில தூக்கமில்லாத இரவுகளுக்கு என்னை இட்டுச் சென்றன."

மேலும், "எனக்கும் வெங்கி மைசூருக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நடந்துள்ளன, இது எனது ஐபிஎல் பயணத்தின் மற்றொரு அத்தியாயம் பற்றியது. அவர்கள் எனக்கு அன்பும் மரியாதையும் கொடுத்துள்ளனர், மேலும் நான் மைதானத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதைப் பாராட்டுகிறார்கள். பழக்கமான ஒரு அமைப்பில் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.

கொல்கத்தா, நான் திரும்பி வருவேன். 2026 ஆம் ஆண்டில் புதிய பவர் பயிற்சியாளராக KKR ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இருப்பேன்."எனக் கூறியுள்ளார்.

Andre Russell

ஐபிஎல்லில் 140 போட்டிகள் விளையாடியிருக்கும் ரசல், 174.18 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 2651 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐபிஎல்லின் Most Valuable Player விருதை வென்றிருக்கிறார்.

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" - ஏபிடி சொல்லும் காரணம் என்ன?
Read Entire Article