ARTICLE AD BOX
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலிஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் அனிருத் பேசுகையில், " 'கூலி' அறிவார்ந்த திரைப்படமாக இருக்கும். அற்புதமான நட்சத்திரங்களுடன் கூடிய ஒரு சிறந்த திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.
'உங்களின் படத்தை இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜிடம் அற்புதமான ஒரு கதை இருக்கிறது' என தலைவருக்கு நான் மெசேஜ் செய்திருந்தேன்.

இந்தக் கூட்டணியை எண்ணி நான்தான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நான் எப்போதும் படம் வெளியாகுவதற்கு முன்பு ட்வீட் செய்வேன். இந்தப் படத்திற்கு ட்வீட் கிடையாது. 'கூலி' திரைப்படத்திற்கு பத்து கப், பத்து நெருப்பு எமோஜிகளைப் போடலாம். இந்த படம் நிச்சயமாக பந்தயம் அடிக்கும். " என்றார் உறுதியாக.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·