Anupama: ``அந்த நிராகரிப்பை என்னால் மறக்க முடியாது" - பகிரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

4 months ago 6
ARTICLE AD BOX

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் பிஸியாகியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் 'பைசன்' படத்தில் நடித்திருக்கிறார்.

தான் சந்தித்த விமர்சனங்கள் குறித்தும் நடிக்கும் வாய்ப்புக் கேட்டு அலைந்த அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசிவருகிறார்.

'பைசன்''பைசன்'

அவ்வகையில் தற்போது தான் முதன்முதலில் சந்தித்த நிராகரிப்பு குறித்துப் பேசியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன், "பட வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் முதன்முதலான கதாபாத்திர தேர்விற்காகச் சென்றிருந்தேன். என்னிடம் புகைப்படம் மட்டுமே இருந்தது. நடிப்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ கூட என்னிடமில்லை. அங்குப் போன உடனே ஸ்கிரிப்டை கையில் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள்.

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

இதுதான் ஸ்கிரிப்டா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஆக்‌ஷன் என்று சொன்னவுடன் நடித்தேன். சரியில்லை மீண்டும் நடிக்கச் சொன்னார்கள். மறுபடியும் நடித்தேன். அவர்களுக்கு அதுவும் பிடிக்கவில்லை.

மூன்றாவது முறையாகவும் நடித்தேன். ஆனால், 'சரி நல்லா நடிச்சிங்க, பார்த்துக்கலாம், நாங்க கூப்பிடுகிறோம்' என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகுக் கூப்பிடவேயில்லை.

அனுபமா பரமேஸ்வரன்அனுபமா பரமேஸ்வரன்
``பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது; ஆனால்" - மனம் திறந்த நடிகை அனுபமா

நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று கண்ணாடி பார்த்து நடிக்கப் பழகினேன். அதுதான் நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழி என்று சொன்னார்கள். என் வாழ்வில் முதன் முறையான சந்தித்த நிராகரிப்பு அது. அதை என்றும் மறக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article