Arya: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு?; பரவும் தகவல் உண்மையா? - ஆர்யா சொல்வதென்ன?

6 months ago 7
ARTICLE AD BOX

ஆர்யா நடித்திருக்கும் 'Mr.X' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தாண்டி, பா. இரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' படத்திலும், 'ஆனந்தன் காடு' படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் தயாரிப்பாளரும் ஆர்யாதான். சினிமா நடிகர்கள் பலர் தற்போது பிசினஸ் பக்கமும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

Arya Arya

அப்படி, நடிகர் ஆர்யா சென்னையில் 'சீ ஷெல்' என்ற உணவகத்தின் கிளைகளை நடத்தி வந்ததாகத் தகவல் பேசபட்டது.

அண்ணா நகர், கீழ்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த 'சீ ஷெல்' உணவகத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.

இந்த உணவகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியதும், ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் சோதனை நடந்து வருகிறது எனச் செய்திகள் வெளியாகின.

இந்த விஷயம் குறித்து ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் ஆர்யா, "சென்னையில் ஐ.டி. ரெய்டு நடக்கும் உணவகத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த உணவகத்தின் உரிமையாளர் வேறு ஒருவர்," எனக் கூறியுள்ளார்.

Arya Arya

கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா என்பவரே இந்த 'சீ ஷெல்' உணவகத்தின் உரிமையாளர் ஆவார்.

குன்ஹி மூசாவின் சென்னை தரமணியிலுள்ள இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article