ARTICLE AD BOX
ஆஸ்திரேலியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை Ashleigh Gardner. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த மாத இறுதியில் டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஒரு பகுதியாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
கிரிக்கெட் வீரர் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாக மார்ச் 13 வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடினார்.

இவருக்கும் இவரின் காதலி மோனிகாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மோனிகாவை வாழ்க்கை துணைவியாக திருமணம் செய்துகொண்டு ஏற்றுக்கொண்டார். இவர்களின் திருமண விழாவில், கார்ட்னரின் நெருங்கிய கிரிக்கெட் தோழிகளான அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரி, கிம் கார்த், எலிஸ் வில்லானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யார் இந்த Ashleigh Gardner?
ஆஷ்லே கார்ட்னர் 2017 பிப்ரவரி மாதம் MCG-ல் நியூசிலாந்திற்கு எதிரான T20I போட்டியில் அறிமுகமானார். அப்போதுமுதல் இன்றுவரை ஆஸ்திரேலிய மகளிர் அணிக்காக ஏழு டெஸ்ட், 77 ஒருநாள் போட்டி, 96 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு அனுபவமிக்க ஆல்ரவுண்டராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும், வலது கை பேட்ஸ்வுமனாகவும் ரசிகர்கள் மத்தில் இடம்பிடித்திருக்கிறார். இதுவரை சுமார் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


8 months ago
8







English (US) ·