Ashwin: 'அன்று கலவரம் செய்தார்கள்; இன்று ட்ரோல் செய்கிறார்கள்!' - CSK ட்ரோல் குறித்து அஷ்வின் பதில்!

8 months ago 8
ARTICLE AD BOX

18வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீனனில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சிஎஸ்கே-வை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஷ்வின் ரவிச்சந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் சிஎஸ்கே ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

cskcsk

அவர் கூறியிருப்பதாவது, 'கிரிக்கெட் ஆடுவதற்காக என்னை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவேன். ட்ரோல் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன்.

ஒரு சில பேர் உங்களிடம் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். உண்மையிலேயே அது மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான் என்றால் நிச்சயமாக அந்த விமர்சனத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இல்லை என்றால் அதனைக் கண்டுக்கொள்ள தேவையில்லை. ரசிகர்களின் வருத்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்கள் அணி மற்றும் வீரர்கள் மேல் வைத்திருக்கும் அன்புதான். நான் சரியாக விளையாடவில்லை என்றால் எனது அப்பா, அம்மா கூட என்னை திட்டுவார்கள்.

அஷ்வின்அஷ்வின்

அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பால்தான் என்னைத் திட்டுவார்கள். ட்ரோல் செய்வதற்கு எல்லாம் கவலையேப் படக்கூடாது. கொரோனா காலத்தில் ஒரு பாசிடிவ் எண்ணத்தை மக்களிடம் கொண்டு வரவேண்டும் என்றுதான் யூடியூப் சேனலை ஆரம்பித்தேன்.

நமது குறிக்கோளில் இருந்து நாம் மாறவேக் கூடாது. 1996 காலக்கட்டத்தில் உலகக்கோப்பையில் இந்தியா தோற்றால் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள். சரியாக விளையாடாத வீரர்களின் புகைப்படத்தை எரிப்பார்கள். இதனை நான் சரி என்று சொல்லவில்லை. இதெல்லாம் ரசிகர்களின் மனக்குமுறலின் வெளிப்பாடு என்று சொல்கிறேன்.

அஷ்வின்அஷ்வின்

அன்றைக்கு அப்படி இருந்த ஒரு எதிர்ப்பு இன்று சோஷியல் மீடியா ட்ரோல் ஆக மாறி இருக்கிறது. இந்தத் தலைமுறையினரிடம் நிறைய பாசிட்டிவிட்டி இருக்கிறது. உங்களின் கருத்துகளை சொல்லும்போது ட்ரோல் செய்கிறர்கள் என்றால் அது அவர்களுடையப் பிரச்னைதான்" என்று கூறியிருக்கிறார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article