Ashwin: 'இதனால்தான் நான் ஐபிஎல்-லில் ஓய்வை அறிவித்தேன்'- ரவிச்சந்திரன் அஷ்வின் சொல்லும் காரணம்!

4 months ago 6
ARTICLE AD BOX

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட், ஓய்வு, அடுத்தக் கட்ட நகர்வு என்ன? என்பது போன்ற பல விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அஷ்வின் அஷ்வின்

ஓய்வு குறித்து பேசிய அவர், " திட்டமிட்டு நான் ஓய்வை அறிவிக்கவில்லை. இந்தியாவிற்காக விளையாடியது, சி.எஸ்.கே-விற்காக விளையாடியது எல்லாம் எதிர்பார்ப்பை மீறி நடந்த ஒரு விஷயம்.

கிரிக்கெட் என்பது நான் மிகவும் என்ஜாய் செய்யக்கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ்.

என்னுடைய கடைசி காலத்தில் கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாடிய ஒரு காலக்கட்டமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான ஒரு முடிவுதான் இந்த ஓய்வு.

யோசித்து பார்த்தேன் 3 மாதம் ஐபிஎல் விளையாடுவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

ரவிச்சந்திரன் அஷ்வின் நேர்காணல்ரவிச்சந்திரன் அஷ்வின் நேர்காணல்

சரியான தூக்கம் இருக்காது. பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும் எமோஷனலாகவும் பாதிப்பு இருக்கும். அதையெல்லாம் யோசித்துப்பார்த்துதான் இந்த முடிவை எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article