Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' - ரிஷப் பண்டை விமர்சித்த அஷ்வின்

7 months ago 8
ARTICLE AD BOX

ஐ.பி.எல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி 27.05.2025 அன்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் சிங்  நான் - ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியிருந்தார். ஆனால், அணியின் கேப்டன் ரிஷப் பன்ட், அந்த அவுட்டை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

இந்த சம்பவத்தில் ரிஷப் பண்டின் செயலைக் கண்டித்துள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.

Ashwin exposed Pant

- Digvesh Rathi appealed for runout(attempted mankad) & umpires asked him if you really want to appeal & decision went to third umpire & they said it was notout. And then Pant withdrawn the appeal(when it was already notout).

- Fake Injury break, Act of… pic.twitter.com/xbH5wgDfPf

— Rajiv (@Rajiv1841) May 28, 2025

நேற்றைய சம்பவத்தில் ரிஷப் பண்டின் பெருந்தன்மை பலரும் பாராட்டினர். ஆனால் யாருமே பௌளரில் எமோஷன்களைக் கண்டுகொள்ளவதில்லை என மற்றொரு கோணத்தில் இது குறித்து பேசி இருக்கிறார் அஷ்வின்.

Ashwin

2019ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஷ்வின், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை நான்-ஸ்டைக்கர் எண்டில் விக்கெட் செய்தார். 2012ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான காமன்வெல்த் ஒருநாள் போட்டியில் திக்வேஷ் ரதியின் இடத்தில் இருந்தார் அஷ்வின். அவர் செய்த நான்-ஸ்டரைக்கர் அப்பீலை ஷேவாக் மற்றும் சச்சின் உரையாடலுக்குப் பிறகு திரும்பப் பெற்றனர்.

அஷ்வின்

"கேப்டனின் கடமை பந்துவீச்சாளரை ஆதரிப்பதே"

திக்வேஷ் ரதிக்கு ஆதரவாக பேசிய அஷ்வின், "திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள். கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவரது கேப்டன் அவரின் முடிவை விமர்சித்துள்ளார். ஆனால் உண்மையில் ஒரு கேப்டனின் கடமை பந்துவீச்சாளரை ஆதரிப்பதேயாகும்...

இது பந்துவீச்சாளருக்கு ஒரு அவமானம். அவர் கூனிக்குறுகிவிடுவார், மீண்டும் அதைச் செய்யமாட்டார். மக்கள் இங்கே வந்து அதைச் செய்யக் கூடாது என்பார்கள். ஆனால் ஏன் அதைச் செய்யக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பண்டை விமர்சிக்கும்விதமாக, "நீங்கள் இப்படிச் செய்வதன் மூலம் ஒரு பந்துவீச்சாளரை அச்சுறுத்துகிறீர்கள். இது நிச்சயமாக அவரைப் பாதிக்கும். உண்மையில் ஒரு பந்து வீச்சாளரைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லாததால், கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவரது மேல்முறையீடு திரும்பப் பெறப்படுகிறது, அவர் இப்படி அவமதிக்கப்பட அனுமதிக்கப்படுகிறார்." எனப் பேசியுள்ளார்.

அத்துடன், "நாம் கிரிக்கெட்டைப் பேசலாம். ஆட்ட விதிகளின்படி, அது மேலேசென்றுவிட்டது, நடுவர் நாட் அவுட் என்றால், அது நாட் அவுட். இங்கு மேல்முறையீட்டை திரும்பப்பெறுவதற்கு ஒன்றுமில்லை" எனக் கூறியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dhoni ஏன் தனித்துவமான கேப்டன்? - அஷ்வின் சொன்ன சுவாரஸ்ய பதில்
Read Entire Article