Asia Cup: 'ஆசியக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது'- கேதர் ஜாதவ் சொல்வது என்ன?

4 months ago 7
ARTICLE AD BOX

ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ind vs pakind vs pak

இதில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருக்கிறார்.

நான் நம்பிக்கையாக கூறுகிறேன்

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், " ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என்று நான் நான் நினைக்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை, எங்கு விளையாடினாலும் வெற்றிபெறும்.

கேதர் ஜாதவ்கேதர் ஜாதவ்

ஆனால் இந்தப் போட்டியை விளையாடவே கூடாது, இந்திய அணியும் விளையாட மாட்டார்கள் இதை நான் நம்பிக்கையாக கூறுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article