ARTICLE AD BOX
கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பேட் கம்மின்ஸ் தயாராக இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொண்டார்.
மேலும், ஜோஷ் ஹேசில்வுட்டும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி முதல் போட்டியில் இடம்பெறவில்லை.
The Ashesஆஷஸில் விக்கெட்டில் ஸ்டார்க் சென்சுரி!
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாததால் வேகப்பந்துவீச்சின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மிட்செல் ஸ்டார்க், முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததோடு நிற்காமல் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி ஒற்றை ஆளாக இங்கிலாந்தைச் சாய்த்தார்.
33 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. வெறும் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க். அதோடு ஆஷஸ் தொடரில் தனது 100-வது விக்கெட்டையும் ஸ்டார்க் கடந்தார்.
MITCH STARC SEEEEEEED! What a ball to dismiss Ben Stokes. #Ashes | #PlayoftheDay | @nrmainsurance pic.twitter.com/PehDst540x
— cricket.com.au (@cricketcomau) November 21, 2025ஸ்டார்க்குக்கு உறுதுணையாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் பிரெண்டன் டக்கெட் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஒல்லி போப் 46 ரன்கள் அடித்தார்.
Ashes 2023: வெற்றியுடன் விடைபெற்ற பிராட்; ஆனாலும் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குதான்! ஆஷஸில் என்ன நடந்தது?ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.
அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும், மார்னஸ் லபுஷேனையும் ஆஸ்திரேலியா ஓப்பனிங் இறக்கியது.
Jofra Archer dismissed debutant Jake Weatherald with the second ball of the innings after this call was overturned. #Ashes | #DRSChallenge | @westpac pic.twitter.com/7jtf1JpJlD
— cricket.com.au (@cricketcomau) November 21, 2025ஆனால், அந்தப் புது முயற்சியை ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே உடைத்தார். ஜேக் வெதரால்ட் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் பக்கம் நடையைக் கட்டினார்.
அடுத்து 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்ற லபுஷேன் - ஸ்மித் கூட்டணியை மீண்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடைத்தார். 9 ரன்களில் லபுஷேன் ஏமாற்றமளித்தார்.
Ben Stokes: Phoenix from the Ashes: மனநலம் குறித்த ஓர் ஆரோக்கியமான உரையாடல்! ஆவணப்படம் சொல்வது என்ன?ஆஷஸ் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை!
அடுத்த ஓவரிலேயே ஸ்மித்தும் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கவாஜாவும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.
அதன் பின்னர் 10 ஓவர்களுக்கு விக்கெட்டை இழக்காமல் ரன்களையும் வேகமாக அடித்துக்கொண்டிருந்த டிராவில் ஹெட் - கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப்பை பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்து கலைத்தார்.
அடுத்தடுத்து வந்தவர்களையும் ஸ்டோக்ஸ் அப்படியே பெவிலியனுக்கு அனுப்ப முதல் நாள் ஆட்டம் 72 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.
Ben Stokesஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங்கில் இங்கிலாந்தை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இன்றைய முதல் நாளில் மட்டும் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன. இதுதான், ஆஷஸ் தொடர் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல் நாளில் விழுந்த அதிக விக்கெட்டுகள் ஆகும்.
இதற்கு முன்பு 1909-ல் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" - சவால் விட்ட ஹைடன்
1 month ago
2







English (US) ·