ARTICLE AD BOX
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாகி முத்திரை பதித்திருக்கின்றன.
பல கலைஞர்கள் மதிப்புமிக்க படைப்புகளைக் கொடுத்திருக்கின்றனர். நம் கோலிவுட்டுக்கு திறமையான பல புதிய இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர்.
இதுபோன்ற திறமையான பல திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நடைபெறுகிறது.
அதுபோல, இந்தாண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வருகிற ஜூன் 13-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட மொத்தமாக 35 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
இதில் 31 பிரிவுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் நீங்கள் டிக்கெட் வென்று பங்கேற்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
பரிந்துரைப் பட்டியலை நீங்கள் முழுமையாகக் காண awards.vikatan.com என்ற இணையதளத்தில் வாக்குகளைப் பதிவிடவும்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கும் இந்த விருது விழாவில் நீங்களும் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு!awards.vikatan.com என்ற இணையதளத்திற்குச் சென்று, பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் வெற்றியாளர் யார் என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் சரியான வெற்றியாளரைத் தேர்வு செய்யும் பட்சத்தில், இந்த விருது விழாவில் கலந்துகொள்வதற்கான இலவச டிக்கெட்டுகள் உங்களுக்கு வழங்கப்படும்.
Ananda Vikatan Cinema Awards 2024முக்கியக் குறிப்பு: பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர்களுக்கு வாக்குகளின் அடிப்படையில் விருது வழங்கப்படாது. விருதுக்கான நடுவர்கள் குழு ஏற்கெனவே வெற்றியாளரைத் தேர்வு செய்துவிட்டது.
அவர்கள் தேர்வு செய்திருக்கும் வெற்றியாளரும், நீங்கள் கணிக்கும் வெற்றியாளரும் ஒன்றாக இருந்தால், இந்த இலவச டிக்கெட் உங்கள் கைகளுக்கு வரும்!
இன்னும் என்ன யோசனை? கீழே குறிப்பிட்டிருக்கும் இணைப்பை கிளிக் செய்து, வெற்றியாளர்களைச் சரியாகக் கணித்து, விகடனோடு சேர்ந்து விழாவைக் கொண்டாடுங்கள்.

7 months ago
8





English (US) ·