ARTICLE AD BOX
'லக்னோ திரில் வெற்றி!'
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Avesh Khan19 வது ஓவர் வரை போட்டி ராஜஸ்தானுக்கு சாதகமாகத்தான் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் அந்த ஓவரை சிறப்பாக வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்து லக்னோவை வெல்ல வைத்தார். ஆவேஷ் கானுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
கடைசி ஓவர் பற்றி ஆவேஷ் கான்!
ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஆவேஷ் கான் பேசுகையில், 'என்னுடைய கை இப்போது பரவாயில்லை. சுபம் துபே அடித்த பந்து கையில் மோதிய போது கையே உடைந்து விட்டதென நினைத்தேன். தலையை சுற்றி நட்சத்திரங்கள் சுழல்வதை போல இருந்தது. என்னால் வெற்றியை கூட கொண்டாட முடியவில்லை.
Avesh Khanயார்க்கர் வீசுவதில் நான் ஸ்டார்க் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. என்னுடைய ஸ்டைலில் ஒரு நல்ல ஆவேஷ்கானாக இருந்தால் போதும் என நினைக்கிறேன். எனக்கென நேரம் எடுத்துக் கொண்டு தெளிவான திட்டமிடலுடன் பந்துவீச வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய யார்க்கர்களை சரியாக வீசிவிட்டால் போதும் என்றே யோசித்தேன்.
RR vs LSG : '19 வது ஓவர் வரை மேட்ச் எங்க கையிலதான் இருந்துச்சு!' - ரியான் பராக் விரக்திகடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிக்களை கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கடைசி பந்தில் எட்ஜ் ஆனால் கூட பவுண்டரி போக வாய்ப்பிருக்கிறது என தெரியும். ஆனால், நான் என்னுடைய யார்க்கரில் மட்டுமே நம்பிக்கை வைத்தேன், பிசகாமல் வீசிவிட்டேன். அணியை பற்றி மட்டும்தான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.' என்றார்.

8 months ago
8







English (US) ·