ARTICLE AD BOX
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் `பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை வைத்து பாக்யராஜ் கண்ணன் இந்த LCU படத்தை இயக்கி வருக்கிறார்.
இப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோரும் LCU-வுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். 'பென்ஸ்' திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
Nivin Pauly - LCU - Lokesh Kanagarajஇயக்குநர் பாக்யராஜ் கண்ணன், "நாங்கள் ஒரு புதிய வைப் தரும் நடிகரைத் தேர்ந்தெடுக்க விரும்பினோம். அவர் வழக்கமான வில்லன் பாணியில் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம்.
இந்தப் படத்தில் ரசிகர்கள் ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நிவின் பாலியை எதிர்பார்க்கலாம். இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
நிவின் அடுத்த மாதம் படப்பிடிப்பில் இணைகிறார். அவரே படத்தில் டப்பிங் செய்யவிருக்கிறார். வேற்று மொழி நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்கள் படத்திற்கு ஒரு தனித்துவமான நிறத்தைச் சேர்க்கிறார்கள்.
அவர் நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். நிவின் மற்றும் லாரன்ஸ் தவிர, மற்றொரு நட்சத்திரமும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
பென்ஸ் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறோம். மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. லோகேஷும் நானும் நண்பர்கள்.
Director Bhagiyraj Kannanநான் மற்றொரு படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் மற்ற இயக்குநர்கள் LCU-வில் படங்கள் எடுக்கும் யோசனையைச் சொன்னார். நான் பணிபுரிந்த படத்தில் CGI அதிகமாக இருந்ததால், அதன் முன் தயாரிப்புக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால் இந்தப் படத்தை எடுத்தேன்.
2024 ஜனவரி முதல் நாங்கள் இந்தப் படம் பற்றி பேசி வருகிறோம். இந்தப் படம் ப்ரீக்வலாகவோ அல்லது சீக்வலாகவோ இருக்காது. ஆனால் LCU-வுடன் பல தொடர்புகள் இருக்கும்.
அடிப்படைக் கதையை லோகேஷ் உருவாக்கியிருக்கிறார். நான் அதை விரிவாக்கி, திரைக்கதையை எழுதியிருக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·