ARTICLE AD BOX
‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகியப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’.
லோகேஷ் கனகராஜின் கதையை பாக்கியராஜ் கண்ணன் படமாக்குகிறார். லோகேஷும் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.
Benz - Lokesh Kanagaraj - Raghava Lawrenceபடத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்தது. லாரன்ஸ் நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படம்தான் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகக் கமிட்டான முதல் திரைப்படம்.
லாரன்ஸ் நடிக்கும் இந்த ‘பென்ஸ்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வுக்கு கீழ் வரும் என்பதை முன்பே அறிவித்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தனர்.
இப்படத்தின் மூலம் லாரன்ஸும் எல்.சி.யு-விற்கு என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இதைத் தாண்டி, மற்றுமொரு நடிகர் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
அந்த நடிகர் குறித்த விவரம் இன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
நிவின் பாலி - Nivin Paulyஇப்படத்தில் லாரன்ஸுடன் நடிகர் நிவின் பாலியும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்குக் கமிட்டாகியிருக்கிறார். கடைசியாக ‘ரிச்சி’ என்ற நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் நிவின் பாலி.
இதைத் தாண்டி, இயக்குநர் ராம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
லாரன்ஸைத் தொடர்ந்து, லோகேஷின் யூனிவர்ஸுக்குள் புதிய வரவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் நிவின் பாலி.
Thrilled to step in as ‘Walter’.
Been waiting to Introduce you to him.
He's intense, he's different, and he's ready.
Get ready for 'Benz'.
Thankyou @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017
Lets rock it @bakkiyaraj_k @offl_Lawrence @SaiAbhyankkar ❤#Benz #LCU pic.twitter.com/w6UleNiaoT

6 months ago
8





English (US) ·