Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்..." - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!

6 months ago 7
ARTICLE AD BOX

IPL 2025ல் கலக்கிய சிறுவன் சூர்யவன்ஷியின் நண்பன் அயன் ராஜ், மாவட்ட அளவிலான போட்டியில் அதேபாணியில் விளையாடி அசத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த 30 ஓவர் போட்டியில், 134 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 41 ஃபோர்கள் உட்பட 327 ரன்கள் அடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

இந்த அசத்தலான இன்னிங்ஸால் அயன் ராஜனின் பவுண்டரிகள் வழியாகவே அவரது சமஸ்கிருத கிரிக்கெட் அணிக்கு 296 ரன்கள் கிடைத்தது. வயதை மீறி 220.89 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது மட்டுமல்லாமல் அவர் களத்தில் அமைதியாக நடந்துகொண்டார் என்றும் இந்தியா டுடே தளம் கூறுகிறது.

வைபவ் சூர்யவன்ஷியுடன் அதிகம் ஆடுகளத்தைப் பகிர்ந்துகொண்ட அயன் ராஜ், "ஒவ்வொருமுறை வைபவ் அண்ணாவுடன் பேசும்போதும் எனக்கு ஸ்பெஷலாக இருக்கும். நாங்கள் சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடியிருக்கிறோம். இன்று அவர் அவருக்காக பெரிய பெயரை சம்பாதித்துள்ளார், நானும் அவரது காலடிகளைப் பின்பற்றுகிறேன்." எனக் கூறியுள்ளார் அயன் ராஜ்.

Bright future for Bihar! ⭐
Young Ayan Raj credits his childhood friend Vaibhav Suryavanshi as his biggest inspiration.

“Every time I talk to Vaibhav bhai, I feel a spark. We grew up playing cricket together — now he’s made a name, and I’m chasing that same dream,” said Ayan… pic.twitter.com/aBktHWiwzO

— Anis Sajan (@mrcricketuae) June 16, 2025

அயன் ராஜின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரராம். இந்திய அணிக்காக விளையாடும் கனவைத் துரத்திய அவர், தற்போது தனது மகன் அதை சாதிக்க பக்க பலமாக இருக்கிறாராம்.

'2 மடங்கு செய்வேன்'

ஐபிஎல் 2025 ல் 7 போட்டிகளில் களமிறங்கிய சூர்யவன்ஷி 252 ரன்கள் குவித்தார். முதல் சீசனிலேயே இதுவரை எந்த இந்தியரும் எட்டாத 35 பந்துகளில் 100 ரன்கள் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

மேலும் ஒரு அரை சதத்தையும் பதிவு செய்தார். 206.55 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 'Super Striker of the Season' விருதை வென்றார்.

ஐபிஎல் சீசன் குறித்து, "இந்த சீசனில் என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை அடுத்த சீசனில் இருமடங்ககாக செய்ய முயல்வேன்" எனப் சூர்யவன்ஷி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Umpire: ஐபிஎல் 2025; நடுவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Read Entire Article