Bumrah: "வெல்கம் முஃபாஸா" - RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

8 months ago 8
ARTICLE AD BOX

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ரா, அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.

Goodnight Paltan! #MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN

— Mumbai Indians (@mipaltan) April 6, 2025

அதன்தொடர்ச்சியாக, தற்போது ஐபிஎல்லிலும் மும்பை அணியில் முதல் நான்கு போட்டிகளை பும்ரா மிஸ் செய்தார். அதன் விளைவு, மும்பையின் மூன்று தோல்விகளிலும் எதிரொலித்தது. இத்தகைய சூழலில், பும்ரா பந்துவீசுவதற்கு ஃபிட் ஆகிவிட்டார் என்ற நற்செய்தி மும்பை ரசிகர்களைக் குதூகலப்படுத்தியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பும்ரா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை எக்ஸ் தளத்தில் அணி நிர்வாகம் ஷேர் செய்திருக்கிறது.

Singing "Naaaaaaant's Ingonyama Bagithi Baba!" in the background #MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvRCB pic.twitter.com/g9aVsorOhj

— Mumbai Indians (@mipaltan) April 6, 2025

அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட், பும்ராவை அப்படியே தூக்கி `வெல்கம் முஃபாஸா' என வரவேற்றார். திங்களன்று (ஏப்ரல் 7) பெங்களூருவுக்கெதிராக நடைபெறும் போட்டிக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை வான்கடேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே. அப்போது பும்ரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தனே, ``பும்ரா தயாராக இருக்கிறார். இன்று பயிற்சியில் ஈடுபட்டார். பெங்களூருவுக்கெதிரான போட்டியில் அவைலபிளாக இருப்பார். நேற்றிரவுதான் வந்தார், இன்று பந்துவீசினார். எல்லாம் நன்றாக இருக்கிறது." என்று கூறினார்.

மும்பை vs ஆர்.சி.பி போட்டியில், பும்ரா ஆடும்பட்சத்தில் கோலி vs பும்ரா ரைவல்ரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' - குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ
Read Entire Article