ARTICLE AD BOX
விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் ரீ ரிலீஸ் முதல் காட்சியை அவ்வளவு கொண்டாடுகிறார்கள்.
விஜயகாந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் காணும் ரசிகர்கள் பலர் இந்த ரீ-ரிலீஸிஸ் கண் கலங்கவும் செய்கிறார்கள்.
Captain Prabhakaran Re Release - Shanmuga Pandianபடத்தின் ரீ-ரிலீஸை இன்று சென்னை கமலா திரையரங்கில் இயக்குநர் செல்வமணி, மன்சூர் அலி கான், விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் எனப் பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
படம் முடித்ததும் செய்தியாளர்களிடம் ரீ-ரிலீஸ் தொடர்பாக இவர்கள் அனைவரும் பேசினார்கள்.
சண்முகப் பாண்டியன் பேசுகையில், "'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெளியாகும்போது நான் பிறக்கவில்லை. அண்ணன்தான் அந்தச் சமயத்தில் பிறந்திருந்தார்.
நான் இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன். அப்பாவை செல்வமணி சார் ரொம்பவே அழகாக திரையில் காண்பித்திருக்கிறார்.
90ஸ் கிட்ஸும், 2கே கிட்ஸும் இந்த திரைப்படத்தைப் பார்த்து மகிழ்கிறார்கள். இந்த திரைப்படத்தை 90-களில் எடுக்கப்பட்டது எனச் சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள்.
இப்போதும் இந்த திரைப்படம் எனக்கு போர் உணர்வைக் கொடுக்கவில்லை. இந்த மாதிரியான திரைப்படத்தை இயக்குநர்கள் இப்போது அதிகமாக எடுக்க வேண்டும்.
Captain Prabhakaran Re Release - Shanmuga Pandianநீண்ட வருடங்களுக்குப் பிறகு அப்பாவை திரையில் பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோல, அப்பாவின் திரைப்படங்களை திரையில் பார்க்க வேண்டும் என எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது.
செல்வமணி சார் 'கேப்டன் பிரபாகரன் 2' எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். நானும் அதற்கு ரெடிதான்!" என்றவரிடம் நேற்றைய த.வெ.க-வின் மாநாட்டில் விஜய், விஜயகாந்த் பற்றி பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "விஜய் சாருக்கு என்னுடைய அப்பா அண்ணனைப் போன்றவர். அதனால்தான் அவர் அண்ணா என நேற்றுக் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவுதான்!
அப்பாவும் விஜய் சாரைச் சிறு வயது முதல் பார்த்து வந்திருக்கிறார். அப்பா மக்கள் சொத்து. இப்போது அப்பாவைக் கொண்டாட வந்திருக்கிறோம். அதுதொடர்பாகப் பேசுவோம்," என முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·