ARTICLE AD BOX
விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
Captain Prabhakaranபடக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
முருகதாஸ் பேசுகையில், " 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் என் வாழ்க்கையில் மிக நெருக்கமான திரைப்படம்.
கள்ளக்குறிச்சியில் இந்த திரைப்படம் 100 நாள்கள் ஓடியது. தொடர்ந்து 10 நாள்கள் நான் தினமும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்தேன்.
'கேப்டன் பிரபாகரன்' படத்தின் திரைக்கதை எனக்குப் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தின் 19 நிமிடத்திற்குப் பிறகுதான் விஜயகாந்த் சார் வருவார்.
அது என்னை மிகவும் ஈர்த்தது. இதன் இன்ஸ்பிரேஷன் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்திருக்கும்.
AR Murugadoss'துப்பாக்கி' படத்தில் பஸ் பிளாஸ்ட் காட்சியில் கதை தொடங்கிவிடும். அதற்கு இன்ஸ்பிரேஷனும் இத்திரைப்படம்தான். ஒரு படத்தில் வில்லன் இறந்தப் பிறகு படத்தில் கதை இருக்காது.
ஆனால், இப்படத்தில் இருக்கும். அதுதான் எனக்கு 'ரமணா' படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜயகாந்த் சாரை வைத்து படம் எடுப்பது எனக்கு கனவு. அது நடந்தது.
அதுபோல, அவர்தான் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இப்படத்தை ரசிகனாக பார்த்து இன்று அப்படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் அதே இயக்குநருடன் அமர்ந்திருப்பது எனக்கு கனவு போல இருக்கிறது. " எனப் பேசியிருக்கிறார்.
A.R.Murugadoss Interview Part 3 | AR Murugadoss Advice to Aspiring Filmmakers| Madharaasi | Vikatan
4 months ago
6





English (US) ·