ARTICLE AD BOX
பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் - தனஶ்ரீ வர்மாவிற்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் யுஸ்வேந்திர சஹால் திருமணம் செய்து கொண்டார்.
யுவேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மாஆனால் சமீபத்தில் யுவேந்திர சஹாலும் அவரின் மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே சஹல் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் மும்பை குடும்ப நீதிமன்றம் இன்று விவாகரத்து வழங்கி இருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

9 months ago
9







English (US) ·