ARTICLE AD BOX
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் ஓவலில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இடதுகையில் பலத்த காயமடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ், ஒற்றைக் கையில் பேட்டிங் ஆட வந்திருக்கிறார்.
Chris Woakesகடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்தின் கையில் நான்கு விக்கெட்டுகள் எஞ்சியிருந்தது. கடைசி நாள் என்பதால் போட்டி எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் எனும் சூழல் நிலவியது. இதனால் இரு அணி வீரர்களுமே அழுத்தத்துடனேயே களமிறங்கினர். இங்கிலாந்து அணி பந்துவீசிய போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கிறிஸ் வோக்ஸ் இடதுகையில் காயமடைந்திருந்தார். இதனால் அவரால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.
போட்டி இன்றைக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியிருப்பதால், கை உடைந்திருந்தாலும் பேட்டிங் ஆட வேண்டும் என கிறிஸ் வோக்ஸ் முடிவெடுத்தார் அதன்படி, அவர் உடைந்த கையை ஜெர்சிக்குள் வைத்து கட்டிக் கொண்டு ஒற்றைக் கையில் பேட்டிங் ஆட வோக்ஸ் தயாராகி வந்தார்.
Chris Woakesஇப்போது இங்கிலாந்து அணிக்கு 10 ரன்கள் தேவை. 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்திருக்கிறது. கிறிஸ் வோக்ஸ் உடைந்த கையோடு பேட்டிங் இறங்கிவிட்டார்.
'கிறிஸ் வோக்ஸ் எங்களை போலவே ஜெர்சி அணிந்து ட்ரெஸ்ஸிங் ரூமில் காத்திருக்கிறார். ட்ரெஸ்ஸிங் ரூமில் பேட்டிங் செய்து வருகிறார். தேவைப்பட்டால் அவர் களமிறங்குவார்.' என ஜோ ரூட் இன்றை நாளின் தொடக்கத்துக்கு முன்பு பேசியிருந்தார்.

4 months ago
6







English (US) ·