ARTICLE AD BOX
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
கூலி திரைப்படம்அதேசமயம் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கும், நாளை வெளியாகவுள்ள கூலி படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
ரஜினிகாந்த் நாளை வெளியாகும் அவருடைய 'கூலி' திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற 'A Mass Entertainer'-ஆக திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது" என்று வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.
Coolie: "தனக்கே உரிய ஸ்டைலால்..." - சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்; இபிஎஸ் வாழ்த்துசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·