Coolie: "இங்குதான் என் பயணம் ஆரம்பித்தது" - கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

5 months ago 6
ARTICLE AD BOX

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கூலி பட ரிலீஸின் புரோமோஷன் வேலைகளில் இறங்கிவிட்டார். பல யூடியூப் சேனல்களுக்கு, பத்திரிகைகளுக்கு நேர்காணல் கொடுத்தவர், இப்போது தான் படித்த கோவை PSG கல்லூரில் கூலி பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காகச் சென்றிருக்கிறார்.

அங்கு தான் படித்த வகுப்பறைக்குச் சென்று பென்சில் உட்கார்ந்த தனது கல்லூரி கால நினைவுகளை ரீவைண்டு பண்ணி ரசித்திருக்கிறார். அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் லோகேஷ், "என்னோட கற்றல் பயணம் எங்கே ஆரம்பித்ததோ அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன். 'கூலி' பட புரோமோஷனுக்காக என்னோட PSG காலேஜுக்கு வந்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Coolie Update: கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு; இந்த தேதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article