ARTICLE AD BOX
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்தரா, செளபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் எனப் பலரும் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரைப்படங்களில் எப்போதும் ஆக்ஷன் காட்சிகளோடு சில 80-ஸ், 90-ஸ் ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்துவார்.
Coolie படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அந்தப் பாடல்களெல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி மீண்டும் அந்தப் பாடல்கள் பலரால் கேட்கப்படும்.
'கைதி' திரைப்படத்தில்தான் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தியிருந்தார்.
இந்த ஐடியா ரசிகர்களிடையே க்ளிக் ஆக, தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் ரெட்ரோ பாடல்களை படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளில் பயன்படுத்தத் தொடங்கினார்.
லோகேஷ் 'லியோ' திரைப்படத்தில் 'ஏழையின் சிரிப்பில்' படத்தில் வரும் 'கரு கரு கருப்பாயி' பாடலையும், 'பசும்பொன்' திரைப்படத்தில் வரும் 'தாமரை பூவுக்கும்' பாடலையும் பயன்படுத்தியிருந்த ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தன.
அதைத் தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் 'கூலி' திரைப்படத்திலும் இரண்டு ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அஜித் - பிரசாந்த் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'கல்லூரி வாசல்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'லயோலா காலேஜ் லைலா' பாடலை ஒரு முக்கியமான காட்சியில் பயன்படுத்தியிருக்கிறார்.
Kallori Vaasal - Loyola College Lailaஇயக்குநர் பவித்ரன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
'கூலி' திரைப்படத்தில் அறிவிப்பு காணொளியிலே ரஜினியின் 'வா வா பக்கம் வா' பாடலைப் பயன்படுத்தி ஒரு டியூன் அமைத்திருந்தார் அனிருத்.
தற்போது 'கூலி' திரைப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றிலும் அந்தப் பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ்.
1983-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'தங்கமகன்' படத்தில் இடம்பெற்றிருந்த அந்தப் பாடலை இளையராஜா இசையமைத்திருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·